கூத்தாநல்லூர் ஏப்ரல் 20
திருவாரூர் மாவட்டம் மருந்து வணிகர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் கூத்தாநல்லூர் ஜோதி மஹால் திருமண மண்டபத்தில் மாநில சங்கத் தலைவர் சோழ.மகேந்திரன் தலைமையில்,மாநில சங்க செயலாளர் M.S.சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.
தஞ்சை மண்டல மருந்து கட்டுப்பாடு துறை உதவி இயக்குனர் S. சுடலை வேல் முருகையா, தஞ்சை சரக மருந்து ஆய்வாளர் P. ராஜதுரை, மன்னார்குடி சரக மருந்து ஆய்வாளர் D.L.தெய்வானை, திருவாரூர் சரக மருந்து ஆய்வாளர் R.ரிஹான முர்ஷிதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மருந்து கட்டுப்பாடு சட்டம், கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை குறித்து கருத்துக்களை உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள்.
முன்னதாக திருவாரூர் மாவட்டம் மருந்து வணிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்தல் அதிகாரி T. முருகப்பன் முன்னிலையில் தலைவராக A.R.லக்ஷ்மணன், S.சிற்றரசு செயலாளராகவும், V.கார்த்திகேயன் பொருளாளராகவும் மற்றும் புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை கூத்தாநல்லூர் தாலுக்கா மருந்து வணிகர்கள் சங்கத்தினர் செய்தனர். இறுதியாக P.கண்ணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.