திருவாரூர் ஏப்ரல் 08
திருவாரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் மாநில ஆணைய தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண் சே.ச அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையம் கலந்துரையாடல், சிறுபான்மையினரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டது.மேலும் சிறுபான்மை வகுப்பைச் சார்ந்த திருவாரூர் மாவட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் திரு வி. மோகனச்சந்திரன் IAS., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கருண்கரட் IPS, மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் இறையன்பு எம்.எம். அப்துல் குத்தூஸ், சிறுபான்மையினர் நலம் துணை இயக்குனர் திருமதி ஷர்மிளா ஆகியோர் உடன் இருந்தனர்.
சிறுபான்மையினர் நலத்துறை திருவாரூர் மாவட்டம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் செயலாளர் J.முகமது அலி என்கிற ஜெர்மன் அலி,துணைச் செயலாளர் பர்வீன், உறுப்பினர் அத்திக்கடை முகமது நசூர்தீன் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான சிறுபான்மையினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.