திருவாரூர் ஏப்ரல் 13
ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா சபை சார்பாக மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகர்களில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் T.M.A முகமம்து இலியாஸ் உலவி அவர்கள் தலைமையில் திருவாரூரில் நடைபெற்றது.
இந்த கண்டன பொதுக் கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,
தமிழக தொழில், முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அமைச்சர் Dr. TRP. ராஜா, நாகை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ்,
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோரும் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியில் இருந்து வந்திருந்த முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.