கடந்த (17.03.25) திங்கட்கிழமை அன்று துபாயில் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலவாரிய குழு உறுப்பினரும், அமீரக திமுக அமைப்பாளருமான எஸ்.எஸ்.மீரான் தலைமையில் நடைப்பெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுடைய 72வது பிறந்த நாள் விழா மற்றும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாயில் தேரா பகுதியில் அமைந்துள்ள லேண்ட் மார்க் கிராண்ட் ஹோட்டலில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வை ஏஜிம் பைரோஸ் கான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில்,பிளாக் துளிப் செந்தில் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனம் ஓதினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பவர் குரூப் மேலாண்மை இயக்குனர் ஜாஹிர் உசேன் அவர்கள் ரமலான் நோன்பு வாழ்த்துகளை தெரிவித்துகொன்டு, 72வது பிறந்த நாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசை பாராட்டியதோடு, முதல்வருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். அதனை தொடர்ந்து காயிதேமில்லத் பேரவை தாஹா, துபாய் TEPA குழுமத்தின் தலைவர் பால்.பிரபாகர், ஊடகவியாளர் முதுவை ஹிதயாத்,ரெங்கராஜன்,சானியோ,முனைவர் ரோஹினி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிறைவாக பேசிய தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலவாரிய குழு உறுப்பினரும், அமீரக திமுக அமைப்பாளருமான எஸ்.எஸ்.மீரான் அவர்கள் இந்தியாவே வியக்கும் அளவுக்கு திராவிட மாடல் அரசை சிறப்பாக வழி நடத்திககொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கொண்டவர், கடந்த மாதம் அரசு நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களின் மனம் குளிரும் வகையில் சென்னையில் ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை செய்ததற்கும், கடந்த ஜனவரியில் நடைப்பெற்ற அயலக தமிழர் திருநாள் நிகழ்ச்சியில் அயலக தமிழர்களின் நலனுக்காக ஏராளமான அறிவிப்பினை செய்ததற்கும், குறிப்பாக நூறு ஆசிரியர்கள் மற்றும் தமிழ்க் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து இவர்களை அயலக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தேவைகளுக்கு அனுப்ப ஒரு திட்டம் உருவாக்கப்படும்.இந்த பயிற்றுநர்கள், அந்த பகுதியிலிருக்கும் தமிழ் சங்கங்களுடன் இணைந்து, தமிழ் மொழியையும்,தமிழ் கலைகளையும் 2 ஆண்டுகளுக்கு நேரடிப்பயிற்சி வகுப்புகள் மூலமாக நடத்துவார்கள். இதற்கு ஆகும் செலவையும் தமிழ் நாடு அரசே ஏற்கும். இதற்காக 10 கோடி ரூபாக் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்து முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டார். வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றியினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துகொண்டார்.
திராவிட கொள்கைகளை பற்றியும்,திராவிட மாடல் அரசைப்பற்றி பேசிய சிறுவர்கள் முகுந்தன் மற்றும் மிருதுளா இருவரும் பொன்னாடை போத்தி கவுரவிக்கப்பட்டார்கள்..
இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு காயிதே மில்லத் பேரவை ஹமீது ரஹ்மான்,கோல்டன் கோர் சம்சுதீன்,முதுவை ஹிதாயத்,ஜெஸிலா ரியாஸ்,மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த இப்ராஹிம், கமால் கேவிஎல்,நஜீம் மரிக்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஜவேரியா ரஷீது,சரத்,இளமுருகன்,வி.எம்.பிரபு,இஞ்சினியர் பாலா,இஷாக்,செந்தில் பிரபு,உதயநிதி பாலா,செய்யது இஸ்மாயில்,பாலா,சேக் தாவுது, அஹமது கபீர், ஃபரீத்,பருத்தி இக்பால்,ஜெகபர் அலி, வீ.பாண்டியன்,அன்பு,செந்தில் பிரபு,தாரிக்,மச்சேந்திர நாதன், அமீன்,பன்னீர்செல்வம்,தமிழ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.